செம்பட்டியில் புகையிலை பொருட்கள் காரில் கடத்தல்; 3 பேர் கைது

செம்பட்டியில் புகையிலை பொருட்களை காரில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-17 17:25 GMT
செம்பட்டி:
செம்பட்டி வழியாக காரில் புகையிலை பொருட்கள் கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுக்கு ரகசிய கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, சேக்தாவூத் தலைமையிலான போலீசார் நேற்று செம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். 
இதில், அந்த காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் அடிபக்கார் மஸ்தான் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 56), கம்பம் பாரதிநகரை சேர்ந்த இப்ராகிம் (37), கம்பம் உமரியாநகர் மெட்டு காலனியை சேர்ந்த பைசல் ரகுமான் (23) என்பது தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து வெங்கடேசன் உள்பட 3 பேரையும் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். அப்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், இப்ராகிம், ரகுமான் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கார் மற்றும் அதில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 29 மதிப்பிலான 214 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
இதற்கிடையே புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், செம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். அப்போது புகையிலை பொருட்கள் கடத்தலை தடுத்த தனிப்படை போலீசாரை அவர் பாராட்டினார். 

மேலும் செய்திகள்