வளவனூர் தனியார் சுகாதார பயிற்சி மையத்தில் காவலாளி மர்ம சாவு

வளவனூர் தனியார் சுகாதார பயிற்சி மையத்தில் காவலாளி மர்ம சாவு

Update: 2021-11-17 17:13 GMT

வளவனூர்

புதுச்சேரி திருபுவனை தென்னந்தோப்பு தெருவை சேர்ந்தவர் லூர்துசாமி(வயது 59). வளவனூரில் உள்ள தனியார் மருத்துவகல்லூரியின் கிராம சுகாதார பயிற்சி மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றார். அப்போது அங்கு லூர்துசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து லூர்துசாமியின் மனைவி ரபேத்தா கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்