ஏரியில் தவறி விழுந்த டிராக்டர் டிரைவர் சாவு
ஏரியில் தவறி விழுந்த டிராக்டர் டிரைவர் சாவு;
விக்கிரவாண்டி
மயிலம் ஒன்றியம் ஆலகிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(வயது55). டிராக்டர் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அங்குள்ள ஏரியில் தவறி விழுந்து இறந்தார். இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.