வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வணிக வரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்;
கோவை
கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள வணிக வரித்துறை அலுவலக ஊழியர்கள் பணி இடமாற்றத்தை கண்டித்தும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு வணிக வரித்துறை கூட்டு நடவடிக்கை குழு மாநில துணை தலைவர் சுரேஷ் பாபு தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத் தை தொடங்கி வைத்து வணிகவரி பணி யாளர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் பேசினார். இதில் பிலால் உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.