பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு
கோவை
கோவையில் தற்கொலை செய்த மாணவிக்கு நீதி கேட்டு சில அமைப் பினர், மாணவியின் புகைப்படத்தை அச்சிட்டு பேனர் வைத்திருந்தனர். அந்த அமைப்புகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்ற னர். இதன்படி ஆர்.எஸ்.புரம் பகுதியில் பேனர் வைத்ததாக கவுதம் என்பவர் மீதும், டவுன்ஹால், வெரைட்டி ஹால் ரோடு உள்ளிட்ட இடங்களில் மாணவியின் பெயர் மற்றும் புகைப்படங்களுடன் பேனர் வைத்ததாக ஒரு சங்கத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
போக்சோ சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளின் பெயர், முகவரி, புகைப்படம், குடும்ப விபரங்கள், பெற்றோர், பள்ளி மற்றும் அவர்களை அடையாளப்படுத்த வழிவகுக்கும் வகையில் எந்தவொரு விபரங்களையும் வெளியிடக்கூடாது. அப்படி யாராவது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.