16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
16 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது;
பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் வினீஸ்(வயது 21). இவருக்கும், 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் வினீஸ் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றதாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் எருமாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். அப்போது பந்தலூர் அருகே ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் சிறுமியுடன் வினீஸ் இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமியை கடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து வினீசை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.