பொதுசுகாதார சுகாதார வளாகம் திறக்கப்படுமா
பொதுசுகாதார சுகாதார வளாகம் திறக்கப்படுமா..
பொதுசுகாதார சுகாதார வளாகம் திறக்கப்படுமா..
திருப்பூர் மாநகர் ஆத்துப்பாளையத்தை ஒட்டியுள்ள வெங்கமேடு சாலையில்பொது சுகாதார வளாகம் உள்ளது. ஒரு சில மாதங்கள் மட்டுமே திறந்திருந்த சுகாதார வளாகம் பின் பூட்டி கிடக்கின்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் உடல் உபாதைகளை கழிக்க சிரமப்படுகிறார்கள். சாலையோரத்திலும் அங்குள்ள முள் செடிகளுக்குச் சென்று பலரும் அசுத்தம் செய்கிறார்கள். இந்த சாலைவழியே பள்ளிக்குழந்தைகள் பொதுமக்கள் வீசுகிறது. எனவே பொது சுகாதர வளாகத்தை உடனே திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்க துப்புரவு பணியாளர்கள் வருகிறார்கள். இதனால் வீடுகளில் உள்ள குப்பைகள் அவரிகளிடம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் வராத நாட்களில் குப்பைகளை சாலையோரம் பொதுமக்கள் கொட்டி விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி வெள்ளியங்காடு கோபால்நகர் 3-வது வீதியில் குப்பை தொட்டி வைக்காததால் சாலையோரம் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் ஈ மற்றும் கொசு தொல்லை அதிகமாகி விட்டது. எனவே குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
கூடுதல் முறை பஸ் இயக்க வேண்டும்
இன்றைய கால கட்டத்தில் பெட்ரோல் உயர்வால் பொது போக்குவரத்தை பொதுமக்கள் அதிகம் நம்பி உள்ளனர். அதுவும் கிராம புற பொதுமக்களுக்கு அரசு பஸ் பெரிதும் பயன் உள்ளதாக உள்ளது. பஸ் இயக்க வில்லை என்றால் அந்த கிராம புற மக்கள் வெளியூர்களுக்கு சென்று வரஅவதிப்படுவார்கள். சாமளாபுரம் பேரூ ராட்சிக்கு உட்பட்ட கள்ளப்பாளையம் கிராமத்திற்கு கருமதம்பட்டி கிளை இருந்து தினமும் 5டி என்ற பஸ் 3 முறை வந்த பஸ் தற் போது 1 முறை மட்டும் வருகிறது. எனவே பழைய முறைப்ப பஸ் இயக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.