திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

Update: 2021-11-17 11:23 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
அய்யப்ப பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் மண்டல பூஜைக்காக தமிழ் மாதம் கார்த்திகை முதல் நாள் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடை பிடிப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிறந்ததுமே அனைத்து பக்தர்களும் குருசாமி மூலம் மாலை அணிவித்து கொண்டு விரதம் தொடங்குவர்.
புனித நீராடினர்
இதையடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அய்யப்ப பக்தர்கள் நேற்று அதிகாலையில் இருந்து கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தங்களுடைய குருசாமி கைகளினால் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். 
விரதம் தொடக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் நேற்று நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான அய்யப்ப பக்தர்களுக்கு, குருசாமிகள் மாலை அணிவித்து விட்டனர். அவர்கள் மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.
இதேபோன்று நேற்று மாவட்டம் முழுவதும் ஏராளமான கோவில்களில் ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் குருசாமி மூலம் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

மேலும் செய்திகள்