நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஆத்திரம்: மனைவியை கத்தியால் குத்திய காவலாளி

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய காவலாளி கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-11-17 07:57 GMT
பூந்தமல்லி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர் (வயது 27). காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு சந்தியா (23) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சந்தியா வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். 

இந்த நிலையில், பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த சந்தியா, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் சவுந்தருக்கும், சந்தியாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியாவை வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் குத்தி விட்டு சவுந்தர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் காயமடைந்த சந்தியாவை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ராயலா நகர் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவாக இருந்த சவுந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்