ஓசூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல் உதிரிபாகங்கள் கடை உரிமையாளர் சாவு
ஓசூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி உதிரிபாகங்கள் கடை உரிமையாளர் இறந்தார்.
ஓசூர்:
ஓசூர் அருகே பத்தலப்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 43). இவர், உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அவர், மோட்டார் சைக்கிளில் தொடுதேப்பள்ளி பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், ஸ்ரீநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.