நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தர்மபுரியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-17 05:22 GMT
தர்மபுரி:
தர்மபுரி ராஜகோபால கவுண்டர் பூங்கா அருகில் நேற்று காலை அனைத்து மாணவர்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேரடி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் மூலம் பாடங்களை படித்த எங்களுக்கு ஆன்லைன் மூலமே தேர்வு நடத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். போலீசார் தடுத்து நிறுத்தினர் இதைத்தொடர்ந்து மாணவர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது. மாணவர்கள் ஒரு சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று உங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுக்கலாம் என்று அறிவுறுத்தினர். இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்