வாலிபருக்கு அரிவாள் வெட்டு

நெல்லையில் வாலிபருக்கு அரிவாள் வெடடு விழுந்தது.

Update: 2021-11-16 22:03 GMT
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சப்பாணி (வயது 24). இவர் நயினார்குளம் மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், தச்சநல்லூர் ஸ்ரீநகரை சேர்ந்த நயினார் (67) என்பவருக்கும் நேற்று காலை அங்குள்ள கோவில் கொடை விழாவில் கணக்கு ஒப்படைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நயினார் அரிவாளால் சப்பாணியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார், நயினாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்