செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு ஆஸ்பத்தியில் நேற்று மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தை சுற்றி பார்த்துவிட்டு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக கலெக்டரை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வேங்கடரங்கன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அலுவலர் ராஜேஷ் கண்ணன், டாக்டர்கள், செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்திலும் கலெக்டர் கோபாலசுந்தரராஜ் ஆய்வு செய்தார். பின்னர் நகராட்சி வாரச்சந்தையில் அமைக்கப்பட்டு உள்ள மைக்ரோ கம்போஸ்ட் தயாரிக்கும் இடத்தையும், நகர் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களையும் பார்வையிட்டார். முன்னதாக, அவரை நகராட்சி ஆணையாளர் நித்யா வரவேற்றார். நிகழ்ச்சியில் பொறியாளர் கண்ணன், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, சுகாதார பணிகள் மேற்பார்வையாளர்கள் முத்துமாணிக்கம், காளியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.