பெண்ணிடம் சங்கிலி பறிப்பு; 3 பேர் கைது

ஆய்க்குடி அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-16 21:06 GMT
அச்சன்புதூர்:
ஆய்க்குடி அருகே அகரக்கட்டு பகுதியை சேர்ந்தவர் பத்துரோஸ் திரவியம். இவர் அப்பகுதியிலுள்ள கல்லூரியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரது தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆய்க்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சங்கரன்கோவில் புதுமனை தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லா மகன் அல்ஹாஜன் (வயது 32), சொக்கம்பட்டி திரிகூடபுரம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் கனி (50) மற்றும் 16 வயது சிறுவன் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் தென்காசி பகுதியில் 2 இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்