இரட்டை கொலையில் ஆட்டோ டிரைவர்கள் 5 பேர் கைது

மதுரை ஒத்தக்கடையில் நடந்த இரட்டை கொலையில் ஆட்டோ டிரைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-16 21:00 GMT
மதுரை
மதுரை ஒத்தக்கடையில் நடந்த இரட்டை கொலையில் ஆட்டோ டிரைவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
 இரட்டை கொலை
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி(வயது 26). இவரது நண்பர் திருச்சியை சேர்ந்த சிங்காரவேல். இவர்கள் 2 பேரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒத்தக்கடை அடுத்த கண்மாய் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை உடனே பிடிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். அதன்படி ஊமச்சிக்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு காட்வின்ஜெகதீஸ்குமார், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் கருப்பாயூரணி வீரபாஞ்சன் பகுதியை சேர்ந்தவர் பல்லு பாலு என்ற பாலமுருகன்(30). இவர் மாட்டுத்தாவணி பஸ் நிலைய பகுதியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கும் செல்லப்பாண்டிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அப்போது அவர் பாலமுருகனை திருச்சியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
5 பேர் கைது
எனவே சம்பவத்தன்று சமரச பேச்சுவார்த்தைக்கு செல்லபாண்டியை அவர் அழைத்துள்ளார். அப்போது அவர் சிங்காரவேலை அழைத்து கொண்டு ஒத்தக்கடை கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்தும்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்களும் ஆட்டோ டிரைவர்களான ஜீவா நகரை சேர்ந்த குண்டுமணி பாலா(31), கருப்பாயூரணி பாண்டிச்செல்வம்(23), கூடல்நகர் முத்தையாசந்திரன்(44), ஒத்தக்கடை கோகுல் (44) உள்ளிட்ட சிலர் சேர்ந்து அவர்களை சரமாரியாக வெட்டி கொன்றனர்.
போலீசார் அவர்களை தேடி வந்தபோது ஒத்தக்கடை பகுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது போலீசார் அங்கு சென்ற போது அவர்கள் தப்பி செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்கள் 5 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அப்போது போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலமுருகன் ஓடும்போது தவறி கீழே விழுந்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை போலீசார் மதுரை பெரிய ஆஸ்பத்திரி யில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்