துறைமங்கலம், அரணாரை பெரிய ஏரிகள் நிரம்பின

மழையால் துறைமங்கலம், அரணாரை பெரிய ஏரிகள் நிரம்பின.

Update: 2021-11-16 20:26 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 73 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பெரம்பலூர் தாலுகாவில் 18 ஏரிகளும், குன்னம் தாலுகாவில் 27 ஏரிகளும், வேப்பந்தட்டை தாலுகாவில் 28 ஏரிகளும் உள்ளன. இவை தவிர 40-க்கும் மேற்பட்ட சிறிய தடுப்பணைகளும் உள்ளன. இவற்றில் பூலாம்பாடி பொன்னேரி, வெங்கலம் பெரிய ஏரி, குரும்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி உள்பட 35 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. குரும்பலூர் மற்றும் செஞ்சேரி ஏரிகளில் இருந்து மழை வெள்ளநீர் பெருக்கெடுத்து வருவதால்  அரணாரை நீலியம்மன் ஏரி நேற்று நிரம்பியது. மேலும் விளாமுத்தூர் மருதையாற்றில் வழிந்தோடும் வெள்ள நீர் துறைமங்கலம் பெரியஏரிக்கு வாய்க்கால் மூலம் திருப்பி விடப்படுவதால் துறைமங்கலம் பெரிய ஏரி நேற்று நிரம்பியது.
பெரம்பலூரில் உள்ள பெரிய ஏரி மற்றும் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி ஆகியவை முழுமையாக நீர் நிரம்பி உள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் வழிந்தோடும் நிலையில் உள்ளது.

மேலும் செய்திகள்