வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-16 20:23 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள அம்பாப்பூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மகுடபதி(வயது 26). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த 26 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் அவரிடம் இருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த பெண் விக்கிரமங்கலம் போலீசில் அளித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மகுடபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்