நகை பறித்த வாலிபர் கைது

காரியாபட்டி அருகே நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-16 18:50 GMT
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே வெற்றிலைமுருகன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வி (வயது 45). இவர் வல்லப்பன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையலர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் தனது பணிக்கு செல்வதற்காக வெற்றிலைமுருகன்பட்டி கிராமத்தில் இருந்து அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த தேனூர் கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜா (30) என்பவர் முத்துச்செல்வி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். உடனே அந்த பகுதியில் உள்ள மக்கள் அவரை விரட்டினர். இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டுவிட்டு அல்லாளப்பேரி கண்மாய்க்குள் சென்றார்.  இதை அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், ஆனந்தஜோதி மற்றும் போலீசார் விரைந்து சென்று அல்லாளப்பேரி கண்மாய்க்குள் பதுங்கியிருந்த அழகுராஜாவை பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த 5 பவுன் தங்க செயினை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்