அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-16 18:49 GMT
கரூர், 
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஜைனப் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:- 
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சமவேலைக்கு சம ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும். தனியார் நுண்கடன், நிறுவன கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கந்துவட்டி தடைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் தொழில் நடத்த வட்டியில்லா கடன் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்