இ சேவை மையத்தில் லேப்டாப், பணம் திருட்டு

இ சேவை மையத்தில் லேப்டாப், பணம் திருட்டு போனது;

Update: 2021-11-16 18:45 GMT
மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த மேலஸ்தானம் பகுதியில் நாராயணன் என்பவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மையத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை மையத்தை திறக்க வந்தபோது கடையின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே வைக்கப்பட்டு இருந்த லேப்டாப், பிரிண்டர் மற்றும் ரூ.92 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து மணமேல்குடி போலீசில் நாராயணன் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்