கொலை செய்து வீசப்பட்ட 2 பேர் உடல்களை மீட்க பேரிடர் மீட்பு படை வருகை

காட்பாடியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்து பாலாற்றில் வீசப்பட்ட 2 பேர் உடல்களை தேடி கண்டுபிடித்து மீட்க அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று வருகின்றனர். கொலை சம்பவத்தில் சிக்கிய மேலும் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Update: 2021-11-16 18:20 GMT
காட்பாடி

காட்பாடியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்து பாலாற்றில் வீசப்பட்ட 2 பேர் உடல்களை தேடி கண்டுபிடித்து மீட்க அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று வருகின்றனர். கொலை சம்பவத்தில் சிக்கிய மேலும் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

2 வாலிபர் மாயம்

வேலூர் காட்பாடியை அடுத்த வண்டறந்தாங்கல் காலனியை சேர்ந்தவர்கள் விஜய் (வயது 20), நேசக்குமார் (19). இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்கள் முன்பு வெளியே சென்றவர்கள் காணவில்லை. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் விருதம்பட்டு போலீசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய விருதம்பட்டு பகுதியை சேர்ந்த பாலா (வயது 25), சரத் (19) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் விஜய், நேசகுமார் கொலை செய்யப்பட்ட தகவலை கூறினர்.
பிடிபட்ட 3 பேர் மற்றும் விஜய், நேசக்குமார்  உள்பட வண்டறந்தாங்கல் மற்றும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த நண்பர்கள் பாலாற்றங்கரையோரத்தில் மது குடித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 
அப்போது விஜய், நேசகுமார் ஆகியோரை மற்ற 6 பேரும் கொலை செய்து பாலாற்றில் வீசி விட்டு தப்பியதமாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் 2 பேர் பிடிபட்டனர்

இந்த சம்பவத்தில் தலைமறைவான விருதம்பட்டு பகுதியை சேர்ந்த சாண்டில்யன், சந்தோஷ் ஆகியோரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நவீன் குமார் என்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட வாலிபர்களின் உடல்கள் பாலாற்றில் இருக்கின்றதா என நேற்று முன்தினம் போலீசார் தேடி பார்த்தனர். கிடைக்கவில்லை.இந்த நிலையில் நேற்று தீயணைப்பு அலுவலர் முருகேசன் ஆலோசனையை பெற்று ஆயுதப்படை போலீசார் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சில கிலோமீட்டர் தூரம் சென்று தேடியும் உடல்கள் கிடைக்கவில்லை. 
இன்று (புதன்கிழமை) போலீசார் தீயணைப்பு துறையினர், மற்றும் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்து படகில் சென்று உடலை தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

---
Image1 File Name : 7360151.jpg
----
Reporter : M. MOHAN  Location : Vellore - KATPADI

மேலும் செய்திகள்