கோவிலுக்குள் இறந்துகிடந்த முதியவர்

கோவிலுக்குள் முதியவர் இறந்துகிடந்தார்.

Update: 2021-11-16 18:04 GMT
திருப்பத்தூர், 
திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் தெற்குபட்டு மாணிக்க நாச்சியம்மன் கோவிலில் காலை 10 மணியளவில் கோவில் பூசாரி கதிரேசன் உள்ளே சென்ற போது முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே திருக்கோஷ்டியூர் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது60) எனத் தெரிய வந்தது. இவர் மனைவி மற்றும் குடும்பத்தினரைப் பிரிந்து சென்னையில் தனியாக இருந்துள்ளார். அண்மையில் வெளியூரிலிருந்து கிராமத்தில் நிலங்களை பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் கோவிலுக்குள் இறந்து கிடந்தது மர்மமாக உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் திருக் கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்