கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-11-16 17:47 GMT
காரைக்குடி, 
காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ஆனந்தவல்லி. இவர்களது மகன் அஸ்வின் (வயது16)  புதுக்கோட்டையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து அஸ்வின் கல்லூரிக்கு வரவில்லை என அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து அஸ்வின் குடும்பத்தார் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமு டைந்த அஸ்வின் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வடக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்