மின்சாரம் தாக்கி பெண் சாவு

மின்சாரம் தாக்கி பெண் சாவு;

Update: 2021-11-16 16:36 GMT
விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு காலனியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மனைவி அமுதா(வயது 49). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை சுத்தம் செய்த போது அருகிலிருந்த மின் விசிறியை நகர்த்தினார். அப்போது எதிர்பாரதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த அமுதாவை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்