பொள்ளாச்சி திண்டுக்கல் ரெயில் பாதையில் மின் மயமாக்கல் பணி மும்முரம்
பொள்ளாச்சி திண்டுக்கல் ரெயில் பாதையில் மின் மயமாக்கல் பணி மும்முரம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-திண்டுக்கல் ரெயில் பாதையில் மின் மயமாக்கல் பணிமும்முரமாக நடைபெற்று வருகிறது.
மின் மயமாக்கல் பணி
திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரையிலான ரெயில் பாதையை மின்மயமாக்க ரூ.159 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோன்று போத்தனூர்- பொள் ளாச்சி இடையேயான ரெயில்பாதையை மின் மயமாக்க ரூ.37 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி-போத்தனூர் இடையே மின் மயமாக்கல் பணிக்கு 906 மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மின் மயமாக்கல் பணிகள் முடிந்து பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடத்தில் முதல் மின்சார ரெயில் இயக்கப்பட்டது.
மும்முரமாக நடக்கிறது
தற்போது பொள்ளாச்சி-திண்டுக்கல் ரெயில் பாதையில் மின் மயமாக்கல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மின் கம்பங்கள் நடப்பட்டு, மின் கம்பிகள் அமைக்கும் பணி மும்முர மாக நடைபெற்று வருகின்றது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி-பாலக்காடு இடையேயான 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் மயமாக்கல் பணிக்கு 1,388 மின் கம்பங்களும், பொள்ளாச்சி-பழனி இடையே 62 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,660 மின் கம்பங்களும், பழனி-திண்டுக்கல் இடையே 58 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,334 மின் கம்பங்களும் நடப்பட உள்ளன.
விரைவில் முடிக்க நடவடிக்கை
இதில் பொள்ளாச்சி-பழனி இடையே மின் கம்பங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. ஒவ்வொரு மின் கம்பங் களும் 400 கிலோ எடையும், 9.5 மீட்டர் உயரமும் உள்ளன. தற்போது மின்கம்பிகள் இழுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதை தவிர சுவிட்ச் நிலையங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. பொள்ளாச்சி-பழனி இடையே மின் மயமாக்கல் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.