திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 96 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 63 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 606 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு பலி இல்லை. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 987 ஆக உள்ளது.
----