கோத்தகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ்(வயது 71). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 2½ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சோலூர்மட்டம் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகார், குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, நேற்று புஷ்பராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவர் குன்னூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.