அகில இந்திய கராத்தே போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
அகில இந்திய கராத்தே போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
திருச்செந்தூர்:
ஷூட்டோ நியூ நிப்பான் கராத்தே டேகாய் இந்தியா சார்பில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் 3-ம் ஆண்டு விலங்கியல் துறை மாணவர் எம்.பூமுத்தையா கலந்து கொண்டு 60 கிலோ எடைப்பிரிவில் கராத்தே சண்டை பிரிவில் 3-வது பரிசும், சான்றிதழும், 19 வயதுக்கு மேல் உள்ள கட்டாவில் 3-வது பரிசும், சான்றிதழும் பெற்றார். வணிக நிர்வாகவியல் 2-ம் ஆண்டு மாணவர் ஜே.நவீன், கட்டா பிரிவில் 2-வது பரிசும், சண்டை பிரிவில் 3-வது பரிசும் பெற்றார்.
போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்களை கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், விலங்கியல் துறை தலைவர் சுந்தரவடிவேல், வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர். கராத்தே கிளப் இயக்குனர் முத்துக்குமார் மற்றும் கராத்தே கிளப் பயிற்சியாளர் ஸ்டிபன் ஆகியோரும் பாராட்டினர்.