விளாத்திகுளத்தில் மகள் திருமணம் முடிந்த மறுநாள் ஆற்றில் தவறி விழுந்த பெண் இறந்து போனார்

விளாத்திகுளத்தில் மகள் திருமணம் முடிந்த மறுநாள் ஆற்றில் தவறி விழுந்த பெண் இறந்து போனார்

Update: 2021-11-16 14:20 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில், மகள திருமணம் முடிந்த மறுநாளில் வைப்பாற்றில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
ஆற்றில் தவறி விழுந்தார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருடைய மனைவி ரேச்சல் (வயது 42). இத்தம்பதியினருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் கிருபா. இவரது திருமணம் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று காலை ரேச்சல் மற்றும் அவரது கடைசி மகள் ஜெசிந்தா (8) ஆகிய இருவரும் வைப்பாற்று பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ரேச்சலுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ரேச்சல் தண்ணீரில் தவறி விழுந்து துடித்துள்ளார். இதனைப் பார்த்த ஜெசிந்தா, தன் தாய் வலிப்பு ஏற்பட்டு துடித்துக்கொண்டிருக்கையில் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்து வீட்டில் உள்ளவர்களை அழைத்துச் செல்வதற்காக ஓடிச் சென்றுள்ளார்.
பரிதாப சாவு
பின்னர் உறவினர்களை அழைத்துக்கொண்டு ரேச்சலை மீட்பதற்காக வந்து பார்த்தபோது, ஏற்கனவே ரேச்சல் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிந்துள்ளார். இதனையடுத்து விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரேச்சல் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மூத்த மகளின் திருமணத்திற்காக போடப்பட்ட பந்தல் கூட பிரிக்காதப்படாத நிலையில், நேற்று வைப்பாற்றில் தாய் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்