குண்டும் குழியுமான சாலை
தாராபுரத்தில் இருந்து சகுனிபாளையம் வழியாக பூளவாடிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையை திம்ம நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தார் சாலை அமைத்து 10 வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் இதுவரை புதுப்பிக்கும் பணி நடக்கவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்படி சென்றாலும் விபத்து ஏற்படுகிறது. அல்லது வாகனம் பழுதாகி விடுகிறது. அவசரத்திற்கு நோயாளிகளை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சகுனி பாளையம் ஊர் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.