கல்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
கல்பாக்கம் அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நல்லூர் கொல்லமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் சந்தோஷ் (வயது 19). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார்.
சந்தோஷ் கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தார். தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மாயமான அவரை தண்ணீரில் குதித்து மீட்டனர். அப்போது அவரை பரிசோதித்ததில் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.