தாய்-தந்தை இடையே தகராறால் விரக்தி; வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
லோகேசின் தாய்-தந்தை இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. லோகேஷ், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அண்ணாசாலை, புரா சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் லோகேஷ் (வயது 21). இவர், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சிறு நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார். லோகேசின் தாய்-தந்தை இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த லோகேஷ், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (23). கழிவுநீர் அகற்றும் எந்திர டிரைவரான இவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.