பரமத்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலை பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு

பரமத்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலை பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு

Update: 2021-11-16 03:55 GMT
பரமத்திவேலூர்:
பரமத்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டது குறித்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் சாவு
பரமத்தியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் நகுலேஸ்வரன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜான்சி (33). இவர்களுக்கு பூஜா (15), சரண்யா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ஜான்சி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து நகுலேஸ்வரன் பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் நேற்று இரவு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
உரிய நடவடிக்கை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் மற்றும் ேபாலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ஜான்சி இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுயளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் செய்திகள்