தர்மபுரி அருகே பஸ் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி

தர்மபுரி அருகே பஸ் மோதி ஓட்டல் உரிமையாளர் பலியானாா்.

Update: 2021-11-16 03:55 GMT
தர்மபுரிூ
தர்மபுரி அருகே உள்ள கடகத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 52). ஓட்டல் உரிமையாளர். இவர் தர்மபுரி-பாலக்கோடு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாதையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்