சேலத்தில் குட்கா கடத்திய 2 பேர் கைது

சேலத்தில் குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 125 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-11-15 22:05 GMT
சேலம்:
சேலத்தில் குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 125 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
குட்கா பொருட்கள் கடத்தல்
சேலம் செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து குகை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மெய்யனூர் ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்த நாராயணன்லால் (வயது 46), குகை பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (34) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர்.
பறிமுதல்
அதில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு கடையில் இருந்து குட்கா பொருட்கள் வாங்கி அதை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 125 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிக அளவு விற்பனை நடைபெறுகிறது என்றும், இதை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்