தேங்கி நிற்கும் மழைநீா்
மதுைர மாவட்டம் திருப்பாைல ேவல்நகா் விாிவாக்கப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், திருப்பாைல.
தொற்றுநோய் பரவும் அபாயம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்கலத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் மலோியா, டெங்கு உள்ளிட்ட ெதாற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதார துறையினர் மேற்கண்ட பகுதிகளை பார்வைவிட்டு தொற்றுநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடு்க்க வேண்டும்.
காதா் மீரா, ஆா்.எஸ்.மங்கலம்.
விபத்தை ஏற்படுத்தும் கால்நடைகள்
சிவகங்ைக மாவட்டம் மானாமதுைர நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளின் தொல்லை அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் பெருகி வரும் கால்நடைகளால் பொதுமக்கள் ெபரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். கால்நடைகளால் அடிக்கடி இந்த பகுதியில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், மானாமதுைர.
நாய்கள் ெதால்ைல
மதுைர வில்லாபுரம் ஹவுசிங் ேபார்டில் நாய்கள் ெதால்ைல அதிகமாக உள்ளது. இதனால் இந்த வழியாக பள்ளி ெசல்லும் குழந்ைதகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதால் இங்கு அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பதுருதீன், வில்லாபுரம்.
கழிவுநீர் கால்வாய்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தகடை மாட்டு சந்தை மேற்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் கழிவுநீர் சாலையோரம் தேங்கிநிற்கின்றது. ஆதலால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்.
பிரகாஷ், சிவகங்கை.
குப்பைகள் அகற்றப்படுமா?
மதுரை கோச்சடை பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் உள்ள முத்து நகரில் அமைந்துள்ள சாலையில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை நிலவுகிறது. ஆதலால் தேங்கி கிடக்கும் குப்பைகள் உடனே அகற்ற வேண்டும்.
ராஜ்குமார், மதுரை.
எரியாத மின்விளக்கு
மதுரை அண்ணாநகர் பஸ் நிலையத்திலுள்ள உயர் கோபுர மின்விளக்கு எரியவில்ைல. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்விளக்குகளில் உள்ள பழுதினை சரி செய்து உடனடியாக எரிய வைக்க வேண்டும்.
அன்புமணி, மதுரை.