மதுரை
திண்டுக்கலில் மாநில அளவில் ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டன. அதில் மதுரையில் ரிசர்வ் லைன் கால்பந்து கிளப் அணி சார்பில் 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடமும், 10-வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 3-வது இடம் பெற்று கோப்பையை கைப்பற்றினார்கள். மேலும் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்கபரிசும் வழங்கப்பட்டது. கோப்பையை வெற்ற மதுரை அணியை கால்பந்து பயிற்சியாளர்கள் சுந்தரரராஜா, வீரமணி ஆகியோர் பாராட்டினார்கள்.