கார் மோதி, கால்நடை மருத்துவ பணியாளர் பலி
காரியாபட்டியில் கார் மோதி, கால்நடை மருத்துவ பணியாளர் பலியானார்.
காரியாபட்டி,
காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 50). இவர் ஆவின் நிறுவனத்தில் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை செய்து வந்தார்.
இந்நிலையில் வேலை விஷயமாக மகேந்திரன் வக்கணாங்குண்டு சென்றுவிட்டு மீண்டும் காரியாபட்டி வருவதற்கு தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நின்றார். அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி வைரமணி ஓட்டிச் சென்ற கார் மகேந்திரன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.