அம்மா உணவகத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு

ராஜபாளையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.;

Update: 2021-11-15 19:44 GMT
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். 
அம்மா உணவகம் 
ராஜபாளையம் ஜவகர் மைதானம் அருகே உள்ள அம்மா உணவகத்தை நகராட்சி வருவாய் அலுவலர் முத்துச்செல்வம் முன்னிலையில் ராஜபாளையம்எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.   ஆய்வின்போது உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து பின் கட்டிடத்தை ஆய்வு மேற்கொண்டார். பழுதடைந்துள்ள மின் விளக்குகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு கருவியையும் உடனே சரி செய்து தரும்படியும், சமையலறையில் பாய்லர் மாற்றவும் வருவாய் அலுவலரிடம் கேட்டுக்கொண்டார். 
சாலை பணிகள் 
அதன்பின்பு புதிய பஸ் நிலையம் முதல் சங்கரன்கோவில் முக்கு வரை பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கும் பணியை பார்வையிட்டார். 
இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் விரைவில் முடிக்கும் படி கேட்டுக்கொண்டார்.  ஆய்வின் போது நகர செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்