4 வீடுகளின் சுவர்கள் இடிந்தன

மழையால் 4 வீடுகளின் சுவர்கள் இடிந்தன.;

Update: 2021-11-15 19:31 GMT
மங்களமேடு:

சுவர்கள் இடிந்தன
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள எழுமூர் கிராமத்தில் சின்னசாமி மற்றும் அவரது மனைவி நாவாம்மாள் ஆகியோர் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் பெய்த மழையால் மண் சுவர் முழுவதும் நனைந்திருந்த நிலையில், அந்த வீட்டின் ஒரு பக்க மண்சுவர் இடிந்து விழுந்தது. மண் சுவர் வெளிப்புறமாக விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் மணிவாசகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சின்னசாமிக்கு அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார்கள். இதேபோல் ஆய்குடி கிராமத்தில் வேலு, அவரது மனைவி அஞ்சலி ஆகியோர் வசித்து வந்த வீட்டின் சுவர் மழையால் இடிந்து விழுந்தது.
கோரிக்கை
மேலும் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் குன்னம் தாலுகா கோவில்பாளையம் கிராமத்தில் வள்ளியம்மமை என்பவரின் கூரை வீட்டின் ஒரு பகுதியின் சுவரும், தேனூர் கிராமத்தில் வசந்தி என்பவரின் கூரை வீட்டின் ஒரு பகுதியின் சுவரும் இடிந்து விழுந்தது. அந்த குடும்பத்தினர் நிவாரண தொகை கேட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்