பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது
நெல்லையில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பெருமாள்புரம் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது.
உடனே போலீசார் அங்கு பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ரெட்டியார்பட்டியை சேர்ந்த கணேசன் (வயது 36), தியாகராஜ நகரை சேர்ந்த பழனியப்ப பெருமாள் (38), குலவணிகா்புரத்ைத ேசா்ந்த சுேரஷ் கண்ணன் (48) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த 2 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.