மண் சாலையை சீரமைக்ககோரி நாற்று நடும் போராட்டம்

மண் சாலையை சீரமைக்ககோரி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-11-15 18:17 GMT
கரூர்
கரூர் வெண்ணைமலை தீரன் நகர் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு உள்ள வெண்ணைமலை குளத்துப்பாளையம் இணைப்பு சாலை கடந்த 20 ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது. இதன் வழியாகத்தான் வி.கே.ஜி நகர், வெங்கமேடு, பூங்குயில் நகர் பகுதி மக்களும் குளத்துப்பாளையம் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளும் சென்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சிலநாட்களாக பெய்த மழையால் மேற்கண்ட மண்சாலையில் மழைநீர் தேங்கி குண்டும், குழியுமாக மாறியது. இதையடுத்து மண்சாலையை தார்சாலையாக மாற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று குண்டும், குழியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்