எலச்சிபாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 2 தொழிலாளர்கள் சாவு

எலச்சிபாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதல்; 2 தொழிலாளர்கள் சாவு

Update: 2021-11-15 17:59 GMT
எலச்சிபாளையம்:
எலச்சிபாளையம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
தொழிலாளர்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வையப்பமலை அருகே மொஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவருடைய மகன் அன்புசெல்வன் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார்சைக்கிளில் எலச்சிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே தர்மபுரி மாவட்டம் இண்டூரை சேர்ந்த மாது என்பவரின் மகன் கல்குவாரி தொழிலாளியான  ஜெய்சங்கர் (19) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.
 எலச்சிபாளையம் அருகே செக்காரப்பட்டி பகுதியில் சென்றபோது 2 மோட்டார்சைக்கிள்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதி ெகாண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அன்புசெல்வன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். ஜெய்சங்கர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
விசாரணை
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த ஜெய்சங்கரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பலியான அன்புசெல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெய்சங்கரும் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்