புதுப்பேட்டை அருகே நீரில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் பலி

போலீசார் விசாரணை

Update: 2021-11-15 17:32 GMT
புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள சோமாசிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகன் அய்யப்பன் (வயது 17). இவர் பண்ருட்டியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார். நேற்று திருவாமூர் மலட்டாற்றில் நண்பர்களுடன் அய்யப்பன் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கினார். இது குறித்த தகவலின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து நீரில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அய்யப்பன் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்