பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது;

Update: 2021-11-15 17:02 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி அமைதி நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் திருமலை சாமி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. 

அங்கு புகையிலை பொருட்களை விற்ற முருகன் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் உடுமலை ரோடு மின் நகரில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (44) என்பவரை கைது செய்தனர்.

 கைதான 2 பேரிடம் இருந்து 55 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்