மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக 3 பேர் கைது
மாணவிக்கு பாலியல் தொந்தரவு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
காரைக்குடி,
காரைக்குடியில் உள்ள அழகு நிலையத்திற்கு தனியார் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது சகதோழி அறிமுகத்தின் பேரில் கண் புருவத்தை அழகுபடுத்த சென்றுள்ளார். அப்போது அழகு நிலைய பொறுப்பாளருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் அழகு நிலைய பொறுப்பாளர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மேற்குவங்காள மாநிலம் டார்லிங்கை சேர்ந்த மன்சில் (வயது 32) அவருக்கு உடந்தையாக இருந்த தேவகோட்டையை விக்னேஷ், காரைக்குடியை சேர்ந்த லட்சுமி மற்றும் 16 வயது சிறுமி மீது போச்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், லட்சுமி, 16 சிறுமியை கைது செய்தனர். மன்சிலை போலீசார் தேடிவருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.