ஜி.தும்மலப்பட்டியில் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ஜி.தும்மலப்பட்டியில் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த சக்தி மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோபிநாதன் ஆச்சாரியார் தலைமையில் வேத பாராயணங்களுடன் புனித நீர் கலசங்களுக்கு யாகபூஜை நடந்தது.
பின்னர் புனித நீர் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து சிறப்பு பூஜை நடத்தி கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. ஓம்சக்தி கோஷம் முழங்கிய பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் வத்தலக்குண்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.