மின்சாரம் தாக்கி வெல்டர் சாவு

தியாகு பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.;

Update: 2021-11-15 14:52 GMT
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் தியாகு (வயது 28). வெல்டர். இவருக்கு திருமணமாகி பிரபாவதி (24) என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தியாகு, மேல்நல்லாத்தூர் பகுதியில் குடோன் கட்டும் பணியில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்று மாலை வழக்கம் போல பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். 

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை உடன் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்