நிறைமாத கர்ப்பிணி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த பெண் மீண்டும் கைது 2 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர்

நிறைமாத கர்ப்பிணி கொலை வழக்கில் ஜாமீனில் வந்து 2 ஆண்டாக தலைமறைவாக இருந்த பெண் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-15 14:51 GMT
வேடசந்தூர்:
வேடசந்தூர் வசந்தநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 27). தனியார் மில்லில் ேவலை செய்து வந்தார். இவருக்கும் சுஸ்மிதா (20) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது. பின்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சுஸ்மிதா பிரசவத்திற்காக கணவரின் சொந்த ஊரான வேடசந்தூர் அருகே உள்ள கவுண்டிச்சிபட்டியில் தங்கி இருந்தார். இந்தநிலையில் கடந்த 23.10.2019 அன்று வெரியம்பட்டி அருகே சாலை ஓரத்தில் சுஸ்மிதா கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சுஸ்மிதாவை கணவர் தினேஷ்குமார், அவரது கள்ளக்காதலி கன்னிவாடி அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி (26) ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
இந்தநிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்த பாண்டீஸ்வரி கடந்த 2 ஆண்டுகளாக வேடசந்தூர் குற்றவியல் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல்  தலைமறைவாகி விட்டார். எனவே பாண்டீஸ்வரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்துமாறு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத்ெதாடர்ந்து கூம்பூர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்புவில் உறவினர் வீட்டில் இருந்த பாண்டீஸ்வரியை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்