கிணற்றில் கிடந்த 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு
திருவள்ளூரை அடுத்த திருவூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது.
திருவள்ளூரை அடுத்த திருவூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). இவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டில் அருகில் உள்ள புதரில் இருந்து வந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதைக் கண்ட அவர் உடனடியாக திருவூரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில், சிறப்பு நிலை அலுவலர்கள் தனசேகர், குமரகுரு, ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி அந்த சாரைப் பாம்பை உயிருடன் பிடித்து அருகில் உள்ள காட்டில் பத்திரமாக விட்டனர்.